தமிழக வருவாய் துறையில் வேலை – தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50000/- சம்பளம்!
தமிழக வருவாய் துறையில் வேலை – தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50000/- சம்பளம்!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் துறையின் கீழ் உள்ள வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ்கண்ட விவரப்படியான அங்கீகரிக்கப்பட்ட சம்பள பட்டியலின்படி உள்ள காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 04.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழக வருவாய் துறை |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் & இரவு காவலர் |
பணியிடங்கள் | 13 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக வருவாய் துறை காலிப்பணியிடங்கள் :
- அலுவலக உதவியாளர் – 11
- இரவு காவலர் – 02
மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இரவு காவலர் கல்வித்தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.01.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
சம்பள விவரம்:
- அலுவலக உதவியாளர் – ரூ.15700-50000/-
- இரவு காவலர் – ரூ.15700-50000/-
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 04.04.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து, கல்விச்சான்று நகல், வயதுச்சான்று நகல்,சாதிச்சான்று நகல், முன்னுரிமைச்சான்று நகல், வேலை வாய்ப்பு பதிவு அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சித் தலைவர்,
வருவாய் துறை (அ-பிரிவு) (முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல் – 637 003.