தமிழக கூட்டுறவுத் துறையில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை – சம்பளம் : ரூ.49000/-
தமிழக கூட்டுறவுத் துறையில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை – சம்பளம் : ரூ.49000/-
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Principal (Stage II), Assistant Professor, Physical Education Director, Librarian, Finance & Accounts Manager, Superintendent, Assistants, Junior Assistants, Computer Programmer, Typist, Security, Office Assistant & Sweeper ஆகிய பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
நிறுவனம் | TNCU – Athoor Cooperative Arts & Science College |
பணியின் பெயர் | Principal (Stage II), Assistant Professor, Physical Education Director, Librarian, Finance & Accounts Manager, Superintendent, Assistants, Junior Assistants, Computer Programmer, Typist, Security, Office Assistant & Sweeper |
பணியிடங்கள் | 33 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNCU காலிப்பணியிடங்கள்:
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தற்போது Principal (Stage II), Assistant Professor, Physical Education Director, Librarian, Finance & Accounts Manager, Superintendent, Assistants, Junior Assistant, Computer Programmer, Typist, Security, Office Assistant & Sweeper ஆகிய பணிகளுக்கு என 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.
TNCU தகுதிகள்:
Teaching Staff பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master’s Degree கட்டாயம் முடித்திருப்பது அவசியமாகும்.
Non- Teaching Staff பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழுள்ளவாறு கல்வித்தகுதி வைத்திருக்க வேண்டும்.
Typist / Office Assistant பணிக்கு 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Security பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC 5000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் தகவல்!
Sweeper பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்ற அனைத்து Non- Teaching Staff பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCU முன் அனுபவம்:
விண்ணப்பதாரருக்கு விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்றார்ப்போல் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் முன் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TNCU வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
TNCU ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Teaching Staff:
Assistant Professor, Physical Education Director, Librarian பணிக்கு – ரூ.15,000/- என்றும்,
Principal பணிக்கு – ரூ.49,000/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Non-Teaching Staff:
Sweeper பணிக்கு – ரூ.7000/- என்றும்,
Security & Office Assistant பணிக்கு – ரூ.8000/- என்றும்,
Junior Assistant, Computer programmer, Typist பணிக்கு – ரூ.10,000/- என்றும்,
Assistant, Finance & Accounts Manager பணிக்கு – ரூ.11,000/- என்றும்,
Superintendent பணிக்கு – ரூ.12,000/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNCU தேர்வு முறை:
நேர்முகத் தேர்வு (Interview)
TNCU விண்ணப்ப கட்டணம்:
Gen / OBC / EWS / male விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 25/-
SC / ST/ PwBD / Women விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது.
TNCU விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். 25.03.2022ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இதற்கு முன்பு விண்ணப்பித்து பயனடையலாம்.