தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் தேர்வர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு TNPSC பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இருப்பினும் கடந்த 2 வருடங்களில் கொரோனா தாக்கம் காரணமாக போட்டித் தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கம் தற்போது சற்று ஓய்ந்து வருகிறது. இந்த நிலையில் போட்டி தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிய நிலையில் தொடர்ந்து குரூப் 4 VAO தேர்வுக்கான அறிவிப்பை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
TNPSC தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில ஆங்கிலப்பாடம் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழித்தாளில் வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற தாள்கள் திருத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குரூப் 4 க்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் குறிப்பிட்டு உள்ளது. மேலும் குரூப் 4 தேர்வை எழுத குறைந்தபட்ச தகுதி 10ம் வகுப்பு ஆகும். இந்த தேர்வு மூலம் ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சு செய்பவர் (டைப்பிஸ்ட்) ஸ்டெனோ, டைப்பிஸ்ட், கள ஆய்வாளர் மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகள் நிரப்பபட உள்ளது.
இந்த நிலையில் அனைத்து தேர்வுகளுக்கும் நடப்பு நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாக உள்ளது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி TNPSC உட்பட அனைத்து போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் TNPSC போட்டி தேர்வுகளுக்கான பொதுதமிழ் உரைநடை பகுதியில் உள்ள கேள்விகளை கொண்ட மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TNPSC பொதுதமிழ் உரைநடை MT 01
Mock Test “WhatsApp Group” Join Now