தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு!
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த 2021 டிசம்பர் 31-ந்தேதி வரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கடந்த ஜனவரி மாதம் (2022) வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களில் ஆண்கள் 35 லட்சத்து 35 ஆயிரத்து 992 பேர்; பெண்கள் 39 லட்சத்து 94 ஆயிரத்து 898 பேர் பெண்கள், 232 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆகும். கொரோனா வருகையால் ஏராளமானோர் வேலை இல்லாமல் திண்டாடி வந்தனர்.
ExamsDaily Mobile App Download
தற்போது நோய் தாக்கம் குறைந்து உள்ளதால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உதவித்தொகையினை பெற பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து, 5 ஆண்டுகளும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டும் போதுமானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – நேர்காணல் மட்டும்..!
மேலும் உதவித்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யலாம். மேலும் வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in அல்லது https://employmentexchange.tn.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |