ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் General Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Unique Identification Authority of India (UIDAI) |
பணியின் பெயர் | General Manager |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
UIDAI காலிப்பணியிடம்:
வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, General Manager பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
UIDAI கல்வித் தகுதி:
General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் /கல்வி நிலையங்களில் Journalism and Mass Communication பாடப்பிரிவில் டிகிரியுடன் P.G. Diploma முடித்திருக்க வேண்டும். அல்லது விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் /கல்வி நிலையங்களில் Mass Communication or Marketing பாடப்பிரிவில் Bachelor’s / Master’s degree முடித்திருப்பது அவசியமாகும்.
UIDAI முன் அனுபவம்:
General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வருடம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் National media house ல் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பது விரும்பத்தக்கது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நன்கு மொழித்திறன் கொண்டிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
UIDAI ஊதிய விவரம்:
பணிக்கு என தேர்வாகும் நபர்கள் ஆண்டு ஊதியமாக ரூ.26 லட்சம் பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு கொடுக்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ தளத்தில் பார்வையிடவும்.
UIDAI தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
UIDAI விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு 20.03.2022ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.