ஆதார் துறையில் தேர்வு இல்லாமல் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
ஆதார் துறையில் தேர்வு இல்லாமல் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) RBL சமீபத்தில் Test Engineer மற்றும் Web Developer பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதால், இது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மேற்கண்ட பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் அனுபவம் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சமீபத்தில் வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Test Engineer மற்றும் Web Developer பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்தது.
- Test Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்புடைய துறையில் 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
- Web Developer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE / B.Tech / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்புடைய Software Development துறையில் 5 ஆண்டு அல்லது Java / Python / C++ போன்ற Programming பிரிவில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- Test Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.6 லட்சம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Web Developer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.16 லட்சம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
UIDAI விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 13.03.2022 ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளதால், இன்றே ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை செய்து முடிக்க அறிவுறுத்துகிறோம்.